"பெண்களின் வளர்ச்சி அதிகாரமளித்தலுக்கு வலிமை தருகிறது" - மகளிர் தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பெண்களின் வளர்ச்சி நாட்டின் அதிகாரமளித்தலுக்கு வலிமை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
x
பெண்களின் வளர்ச்சி நாட்டின் அதிகாரமளித்தலுக்கு வலிமை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் நகரில் உள்ள டோர்டோ பெண் துறவிகள் முகாமில்  சர்வதேச மகளிர் தினம் குறித்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்றார். இதில் உரையாற்றிய பிரதமர்,  புவியை தாயாக கருதும் ஒரு தேசத்தில் பெண்களின் வளர்ச்சி என்பது நாட்டின் அதிகாரமளித்தலுக்கு மேலும் வலிமை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது நாட்டின் பிரதான முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடனில் 80% பெண்களின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு சட்ட விதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை போன்ற குற்றம் புரியும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்