அதிவேகமாக ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்த கார்...பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

அதிவேகமாக ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்த கார்...பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
x
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகில்பாபு என்ற அந்த இளைஞர் தனது காரில் கிழக்கு கடற்கரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த ஒர்க் ஷாப்பிற்குள் புகுந்தது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கார்கள் சேதமடைந்தன. இந்நிலையில், லேசான காயங்களுடன் நிகில் பாபு உயிர் தப்பிய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்