திருப்பதி செல்ல மக்களுக்கு இலவச மினி பேருந்து சேவை துவக்கம்
திருப்பதி செல்ல மக்களுக்கு இலவச மினி பேருந்து சேவை துவக்கம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதி மக்களுக்கு திருப்பதி செல்ல இலவச மினி பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் துவக்கி வைத்தார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட நந்தகுமார், இலவசமாக பொதுமக்கள் திருப்பதி செல்ல பேருந்து சேவையை துவங்கி வைத்தார். இதில் ஏழை எளிய மக்கள் திருப்பதிக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், தினந்தோறும் காலை 7 மணிக்கு வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து இலவசமாக செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story