"கொரோனா காட்டிய வழி - டிஜிட்டல் எதிர்காலம்" : பிரதமர் மோடி

உலக தாய்மொழி தினமான இன்று, தாய்மொழி கல்வி என்பது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஏற்றது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
x
உலக தாய்மொழி தினமான இன்று, தாய்மொழி கல்வி என்பது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஏற்றது என பிரதமர் மோடி பேசியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள கல்வித்துறை தொடர்பான திட்டங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் இணையவழி கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், அடிமட்டத்தில் உள்ளவர்களிடமும் தேசிய கல்வி கொள்கையை எடுத்து செல்ல நடப்பாண்டிற்கான பட்ஜெட் பெரிதும் உதவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழங்கள் மூலம் நாட்டில் உள்ள இடப்பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். கொரோனா காலகட்டத்திற்கு முன்பே தாம் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஆதரவாக இருந்ததாகவும், தற்போது டிஜிட்டல் தான் எதிர்காலம் என கொரோனா காட்டியுள்ளதாகவும் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்