இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் பதிவானது.
x
டிசம்பர் 30ம் தேதி 16 ஆயிரத்து 764 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 51 நாட்களுக்கு பிறகு மீண்டும் சரிந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 491 ஆக உயர்ந்தது. 
ஒரே நாளில் 48 ஆயிரத்து 847 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
தினசரி பாதிப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும், தொற்றிலிருந்து மீண்டு வருவோர் விகிதம் 98.28 சதவீதமாகவும் உள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணைக்கையும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 187 ஆக குறைந்துள்ளது. 
ஒரேநாளில் வைரஸ் தொற்று 673  பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை,  5 லட்சத்து 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை நாடு முழுவதும் 175 கோடியே 37 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்