பீகார் முதல்வரை சந்தித்த பிரசாந்த் கிஷோர்...2024ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகமா..?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
x
தேர்தல் வியூகம் வகுத்து தனது வசம் இருக்கும் கட்சியை வெற்றிபெற செய்வதில் திறமையான பிரசாந்த் கிஷோர், 2015ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை வெற்றிப்பெற செய்தார். இதனால் அவர் ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவரானார். பின்னர் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறினார். தற்பொழுது மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பீகார் முதலமைச்சர் இல்லத்தில் பிரசாந்த் கிஷோரும், நிதிஷ்குமாரும் சந்தித்து பேசியுள்ளனர். 2 மணி நேரம் நடைபெற்ற இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என இருவரும் கூறினாலும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆலோசனையை  பிரசாந்த் கிஷோரிடம் நிதிஷ்குமார் கேட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்