உத்தரபிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் | UttarPradesh | Election

உத்தரபிரதேச மாநிலத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
x
அம்மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. ஹாத்ரஸ், பிரோஸாபாத், மெயின்புரி, ஜான்ஸி, கன்னாஜ் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ள மூன்றாம் கட்ட தேர்தலில் இரண்டே கால் கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் மெயின் புரி மாவட்டத்திலுள்ள கர்ஹால் சட்டமன்ற தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய இணையமைச்சர் சத்தியபால் சிங் பாதல் போட்டியிடுகிறார். மேலும் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும் பிரகதீஷ் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான ஷிவ்பால் யாதவ் போட்டியிடுகிறார். 


Next Story

மேலும் செய்திகள்