கொரோனா பரிசோதனைகளை குறைக்க முடிவு - சுகாதாரத்துறை உத்தரவு

தினசரி கொரோனா பரிசோனைகளை 60 ஆயிரமாக குறைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
x
தினசரி கொரோனா பரிசோனைகளை 60 ஆயிரமாக குறைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 
சளி, காய்ச்சல், தொண்டை வலி ,மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுக்கு கொரோனா பரிசோதனை அவசியம் என்று தெரிவித்துள்ளது. 

அதேபோல் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளோருக்கு பரிசோதனை கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வோருக்கு பரிசோதனை அவசியம் எனவும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களில் 2 சதவீதம் பேர் ரான்டம் முறையில் பரிசோதிக்கப்படுபவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

வணிக வளாகம்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு வருவோர் ரான்டம்  முறையில் பரிசோதிக்கப்படுபவர் என்றும் இது தவிர மற்றவர்களுக்கு தேவையில்லாமல் பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர மற்றவர்களுக்கு தேவையில்லாமல் பரிசோதனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தினமும் 1 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை 60 ஆயிரமாக குறைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்