ஹிஜாப் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாள உடைகளை அணிய கூடாது என, கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வரும் வரை மத அடையாள உடைகளை அணிய கூடாது என, கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை மாணவர்கள் அணியக்கூடாது என அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு அனைத்து மதத்தினருக்கும் எதிராகவும், மத உரிமையை பாதிக்கும் வகையிலும் இருப்பதாக முறையிடப்பட்டது.
மேலும் மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமை விசாரிக்கவும் கோரிக்கை விடப்பட்டது.
அப்பொழுது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இன்னும் வெளியாகவில்லை என்றும், அரசியலமைப்பு சட்டப்படி ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் தீர்வுக்காணப்படும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை தொடர்து பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஹிஜாப் தொடர்பான விசாரணையையும், உத்தரவையும் கவனித்து வருவதாக தெரிவித்ததுடன்,
ஹிஜாப் பிரச்சனையை தலைநகர் வரை கொண்டு வந்து தேசிய பிரச்சனையாக மாற்ற வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
மாணவர்களுக்கான தேர்வுகள் பாதிக்கப்படும் பட்சத்தில் உரிய நேரத்தில் ஹிஜாப் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்த நீதிபதி,
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைவருக்கும் பொதுவானது என்றார்.
இதனிடையே, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியும் உரிமையை அங்கீகரிக்க கோரி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி. ஸ்ரீனிவாஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Next Story