ஹிஜாப் விவகாரம் - இன்று விசாரணை
ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று பிற்பகல் நடைபெறும் என கர்நாடக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று பிற்பகல் நடைபெறும் என கர்நாடக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஹிஜாப் விவகாரம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த சில அரசியலமைப்பு கேள்விகளை எழுப்புகிறது என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்குக்கு கூடுதல் அமர்வு அமைக்க வேண்டுமா என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய வேண்டும் என்றுக் கூறிய நீதிபதி
வழக்கை உடனடியாக தலைமை நீதிபதியின் முன் பரிசீலனைக்கு வைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் என்றும்
அந்த அமர்வில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் மற்றும் நீதிபதி ஜே.எம்.காழி ஆகியோர் இடம்பெறுவர் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இன்று பிற்பகலே விசாரணை தொடங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Next Story