"ரயில்வேயில் வேலை.. கை நிறைய சம்பளம்..!!" ஏமாற்றும் இடைத்தரகர்கள் - எச்சரிக்கும் ரயில்வே நிர்வாகம்

ரயில்வே பணி வழங்குவதாக கூறி மோசடி..இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
x
ரயில்வே போட்டி தேர்வுகள் கணினி மயமாக்கப்பட்டுளதால், பணிகளில் சேர விரும்புபவர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ரயில்வே பணிகளுக்கு  அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே பணியாளர் தேர்வு முகமை வாயிலாக போட்டி  தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ரயில்வே வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இவை தவிர வேறு எந்த நிறுவனமும் ரயில்வே பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதில்லை. ரயில்வே பணியாளர் தேர்வுக்கு, தனி முகவர்களையோ அல்லது பயிற்சி நிலையங்களையோ அனுமதிப்பதில்லை.

 இதனால் ரயில்வே பணியில் சேர விரும்புவோர் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே பணிக்கு குறுக்கு வழிகளை நாடினால் தகுதி நீக்கம் செய்யப்படுவது மட்டுமின்றி, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. யாராவது பணம் கொடுத்தால் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்