போலி ரேஷன் கார்டுகள் - உத்தர பிரதேசம் முதலிடம்

இந்தியாவில் அதிக அளவில் போலியான ரேஷன் அட்டை வைத்திருந்த மாநில பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
இந்தியாவில், ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்து உள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலியான, தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். 2014 முதல் 2021ஆம் ஆண்டு வரை தகுதியற்ற நான்கு கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 585 ரேஷன் அட்டை கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் ஒரு கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 301  ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை மூன்று லட்சத்து நான்காயிரத்து 140 தகுதியற்ற ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்