ஒமிக்ரான் அச்சுறுத்தல் - தீவிர கண்காணிப்பு கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தமிழக, கர்நாடக எல்லையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
ஒமிக்ரான் அச்சுறுத்தல் - தீவிர கண்காணிப்பு கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு
x
ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தமிழக, கர்நாடக எல்லையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழக, கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையாக அமைந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தமிழக எல்லையில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கக்கநல்லா சோதனைச் சாவடி வழியாக தமிழகம் வரும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்துள்ள பயணிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்து வருகின்றனர். காவல் துறை, வனத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்