மீண்டும் அமலுக்கு வருகிறதா இரவு நேர ஊரடங்கு ?
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊராடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊராடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் ஒமிக்ரான் பாதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், ஒமிக்ரான் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகள் மிக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எந்த விதத்திலும் மாநில தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே தொற்றில் இருந்து விடுபடும் தீர்வு என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க மாநில மற்றும் யூனியன் அரசுகளை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story