விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து - நேரில் ஆஜரான கங்கனா ரனாவத்

விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட வழக்கின் விசாரணைக்காக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மும்பை காவல்நிலையத்தில் ஆஜரானார்.
x
விவசாயிகள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட வழக்கின் விசாரணைக்காக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மும்பை காவல்நிலையத்தில் ஆஜரானார்.

விவசாயிகளின் போராட்டம் குறித்தும், சிக்கியர்கள் குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டதாக கங்கனா மீது மும்பையில் உள்ள கர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி இம்மாத தொடக்கத்தில் கங்கனாவிற்கு சம்மன் அனுப்பினர். இதனிடையே தன்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில் ஜனவரி 25ம் தேதி வரை கங்கனாவை போலீசார் கைது செய்ய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கிர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக கங்கனா ரணாவத் ஆஜரானார். அவர் தரப்பு விளக்கத்தை போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்