முதல்முறையாக விஐபி பாதுகாப்பு பணியில் பெண்கள்

இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
x
மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் முதல் முறையாக பெண் கமாண்டோக்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

நாட்டின் மிக முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு மத்திய ரிசர்வ் காவல்படை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு பிரிவில் இதுவரை ஆண் கமாண்டோக்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அப்பிரிவில் பெண்களையும் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இசட் பிளஸ் பாதுகாப்பு பெற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கான பாதுகாப்பு பணியில் இந்த பெண் கமாண்டோக்கள் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 32 பெண் கமாண்டோக்களுக்கு 10 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணியில் சேர உள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், அடுத்து நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் தலைவர்களின் பாதுகாப்பு பணியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்