"தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை நீக்க முடியாது" - உயர் நீதிமன்றம் அதிரடி
தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க கோரி, கேரளா மாநிலம் கடுந்துருத்தியை சேர்ந்த பீட்டர் மாலிப்பரம்பில் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தாம் தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருப்பது மனித உரிமை மீறல் என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹிகிருஷ்ணன், இந்த வழக்கின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சாடியதோடு,
பொதுநலன் கருதி அல்லாமல் புகழ் நலன் கருதி தாக்கல் செய்யப்படும் இது போன்ற வழக்குகளை ஊக்குவிக்க முடியாது என தெரிவித்ததோடு,
மனுதாரரின் கோரிக்கையை எற்க மறுத்ததோடு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
அபராதத் தொகையை ஆறு வாரங்களுக்குள் கேரள சட்ட சேவை சங்கத்தில் செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
Next Story