"உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும்" - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை
"உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும்" - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை
"உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும்" - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை
வெளிநாட்டு பள்ளிகளில் படித்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும் என, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய இந்திய குடும்பங்கள், தாய் நாட்டிற்கு அதிக அளவில் திரும்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கல்வி பாடத் திட்டங்கள், சிபிஎஸ்இ பாடத் திட்டங்களுக்கு நிகரானதா என்பதை ஒப்பிட்டு பார்த்து, சிபிஎஸ்இ அனுமதி பெற்றபின் மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடைமுறை இருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தற்போது இந்தியா திரும்பும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மேலும் எந்தெந்த வெளிநாட்டு பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ பாடத் திட்டங்களுக்கு நிகரானவை என்ற விபரங்களையும் இணையத்தளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், பள்ளிகள், மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
Next Story