பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு

இன்றுடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், பொது மக்கள் வசம் உள்ள பணத்தின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு
x
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் 5ஆம் ஆண்டு

இன்றுடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், பொது மக்கள் வசம் உள்ள பணத்தின் மதிப்பு 64 சதவீதம் அதிகரித்துள்ளது.2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு தொலைகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.கருப்பு பணம் ஒழிப்பு, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை முறையை ஊக்கப்படுத்தவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.ரொக்கப் பரிவர்த்தனைகளை குறைத்து, வங்கி மற்றும் கடன் அட்டைகள், டிஜிட்டல் முறை பரிவர்த்தனைகளை அதிகரிக்க செய்ய, பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஊக்கமளிக்கும் என்று சொல்லப்பட்டது.2016 நவம்பர் 4இல் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தின் அளவு 17.74 லட்சம் கோடியாக இருந்ததாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை கூறியிருந்தது.2021 அக்டோபர் 29இல் இது 64 சதவீதம் அதிகரித்து 29.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.கடந்த 5 ஆண்டுகளில் ரொக்க பணப் பரிமாற்றத்தின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது,பண மதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்பதை சுட்டுவதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 16.8 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு 2017இல் 12.6 சதவீதமாக இருந்து 2021இல் 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்