ஆர்யன் கான் வழக்கில் திடீர் திருப்பம் - வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்

ஆர்யன் கான் வழக்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி மாற்றப்பட்டது ஆரம்பம் தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஆர்யன் கான் வழக்கில் திடீர் திருப்பம் - வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்
x
சொசுகு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான ஆர்யன் கானை விடுவிக்க மும்பை மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்காடே லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் ஆர்யன் கான் உட்பட  5 முக்கிய வழக்கு விசாரணையில் இருந்து சமீர் வான்கடே மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அமைச்சர் நவாம் மாலிக், 5 வழக்குகளில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டது ஆரம்பம் தான் என்றும், இன்னும் பல மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சமீர் வான்கடே, வழக்கு விசாரணையில் இருந்து தன்னை நீக்கவில்லை என்றும், போதைப்பொருள் வழக்கை மத்திய குழு விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்ததாக கூறினார்.  அதனால் ஆர்யன் கான் மற்றும் சமீர்கான் வாழக்குகள் டெல்லி சிறப்பு விசாரணை குழு விசாரிக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்