நீட் தேர்வில் 720க்கு, 720 எடுத்த 3 மாணவர்கள் - ஜம்மு காஷ்மீர் மாணவருக்கு ஆளுநர் பாராட்டு
நீட் தேர்வில், 720க்கு 720 மதிப்பெண் எடுத்து ஜம்மு காஷ்மீர் மாணவர் சாதனை படைத்துள்ளார்.
தன்மாய் குப்தா என்ற அந்த மாணவரின் தாய், தந்தை இருவரும் மருத்துவரான நிலையில், தங்களது மகனை, மருத்துவத் துறை சார்ந்து படிக்க வைக்க ஆரம்பத்தில் இருந்து பயிற்சி அளித்ததாக கூறினர். அவருக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல், தெலங்கானாவை சேர்ந்த மிரினால் குட்டெரியும், மகாராஷ்டிராவை சேர்ந்த கார்த்திகா நாயரும் 720க்கு, 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Next Story