ஆர்யன்கான் ஜாமின் மனு மீண்டும் இன்று விசாரணை - மும்பை உயர்நீதிமன்றம்
போதை பொருள் தொடர்பான வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் தொடர்பான வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமின் மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில், ஆர்யன்கானின் ஜாமின் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆர்யன் கான் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி வாதத்தை எடுத்து வைத்தார். இதை அடுத்து ஜாமின் மனு மீதான விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் மீண்டும் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த மனு, இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின் போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தங்களது வாதத்தை எடுத்து வைக்க உள்ளனர். இதற்கு பிறகு ஆர்யன் கானுக்கு ஜாமின் கிடைக்குமா என்பது தெரிய வரும்.
Next Story