கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்..

கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்
கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்..
x
கேரளாவில் தொடரும் கனமழை : வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்.. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொல்லம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றது.கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் கிளாப்பனா கிராமத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து தென்மலை அணை திறக்கப்பட்டதால் கல்லடை ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீடுகளும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மேலும், கனமழையால் பதனபுரம் பகுதியில் உள்ள ஒரு வீடு இடிந்து விழுந்த நிலையில் அஞ்சல் ஆயூர் பகுதியில் தரைப்பாலமும் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்