உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் குளறுபடி - ஆளும் அரசை எதிர்த்து முழு கடையடைப்பு
குளறுபடிகளை சரிசெய்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வலியுறுத்தி புதுச்சேரியில் எதிர்கட்சியான காங்கிரஸ் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
புதுச்சேரியில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தலை நடத்துவதில் குளறுபடிகள் இருப்பதாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தொகுதி சீரமைப்பு, வார்டு தேர்வு, இட ஒதுக்கீடு ஆகியவற்றில் குளறுபடி இருப்பதாக கூறிய காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆளும் என்.ஆர். காங்கிரஸிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒன்றாக இன்று நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடைகள் திறக்கப்படாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடியதுடன் குறைந்த அளவிலான வாகனங்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர்க்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story