லக்கிம்பூர் வன்முறை: 12 மணி நேர விசாரணை - அமைச்சர் மகன் கைது

உத்தரபிரதேச லக்கிம்பூரில் பேரணி சென்ற விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நடந்தது என்ன விரிவாக பார்ப்போம்
லக்கிம்பூர் வன்முறை:  12 மணி நேர விசாரணை - அமைச்சர் மகன் கைது
x
அக்டோபர் 3ஆம் தேதி... ஞாயிற்றுக்கிழமை

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

அன்றைய தினம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், அமைச்சர்கள் வருகையை எதிர்த்தும் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா விவசாய அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது

பிற்பகல் 3 மணியளவில் துணை முதலமைச்சர் மவுரியாவை அழைப்பதற்காக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பாதுகாப்பு கான்வாயுடன் சென்றதாக  கூறப்படுகிறது

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கான்வாயில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதி, நிற்காமல் சென்றதாகவும் சொல்லப்படுகிறது

ஆத்திரமடைந்த விவசாயிகள் தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை வெடித்தது

வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர், பத்திரிகையாளர், பாஜகவினர் 3 பேர் என 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது

அமைச்சரின் மகன் தான் கார் ஏற்றி கொன்றார், இது திட்டமிட்ட சதி என விவசாயிகள் அமைப்பு குற்றம்சாட்ட,

விவசாயிகள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், அதனால் தான் வன்முறை வெடித்ததாகவும் ஆஷிஷ் மிஸ்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அன்று இரவு லக்கிம்பூருக்கு செல்ல இருந்த பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்


பின்னர் லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தலைவர்கள் வர தடை விதிக்கப்பட்டது


தொடர் விமர்சனங்களை அடுத்து அரசியல் தலைவர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது

அக்டோபர் 6ஆம் தேதி இரவு, உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.


எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக எடுத்த உச்சநீதிமன்றம், விசாரணையில் திருப்தி இல்லை என உத்தரப்பிரதேச மாநில அரசை கண்டித்ததோடு, குற்றம்சாட்டப்பட்டோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை நேரில் ஆஜராகுமாறு 8ஆம் தேதி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்

ஆனால், உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஆஜராகாமல் இருந்தார்

சனிக்கிழமை அன்று நேரில் ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவிடம் போலீசார் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்

நீண்ட விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்