தீவு பகுதிக்கு தடுப்பூசிகளுடன் பறந்த ட்ரோன் - 15 நிமிடத்தில் எடுத்து செல்லப்பட்ட தடுப்பூசி

கொரோனா தடுப்பூசியை ட்ரோன் மூலம் விநியோகிக்கும் பணியை டெல்லியில் இருந்தபடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மந்தாவியா தொடங்கி வைத்தார்.
தீவு பகுதிக்கு தடுப்பூசிகளுடன் பறந்த ட்ரோன் - 15 நிமிடத்தில் எடுத்து செல்லப்பட்ட தடுப்பூசி
x
கொரோனா தடுப்பூசியை ட்ரோன் மூலம் விநியோகிக்கும் பணியை  டெல்லியில் இருந்தபடி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மந்தாவியா தொடங்கி வைத்தார். மணிப்பூரியின் விஷ்ணுபூர் மருத்துவமனையில் இருந்து கரங் தீவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.  25 கிலோ மீட்டர் தொலைவை 15 நிமிடங்களில் கடந்து ட்ரோன் சென்றது. அங்கு முதல் டோஸை 10 பேரும், 2வது டோஸை 8 பேரும் செலுத்தி கொண்டனர். இதன் தொடர்ச்சியாக மணிப்பூர், நாகாலாந்து, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. தெற்கு ஆசியாவில் ட்ரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்