"பண்டோரா ஆவணம் - நடவடிக்கை எடுக்கப்படும்"
பண்டோரா ஆவணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"பண்டோரா ஆவணம் - நடவடிக்கை எடுக்கப்படும்"
பண்டோரா ஆவணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச ஊடகவியலாளர்கள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பு, வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கான சொத்துக்களை வாங்கியிருப்பதாக கூறி, பண்டோரா ஆவணங்கள் என்ற பெயரில் பட்டியல் வெளியிட்டது.இதில் சச்சின் டெண்டுல்கர், அனில் அம்பானி, நிரவ் மோடியின் சகோதரி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், இது குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக ஒரு சில இந்தியர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை மட்டுமே, ஊடகங்களில் இதுவரை வெளியிட்டுள்ளதாக தெரிவித்த மத்திய அரசு, இதுவரை அவர்களின் விவரத்தை இணையதளத்தில் வெளியிடவில்லை என குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு சம்பந்தப்பட்ட அமைப்பு, இது குறித்த தகவலை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. பண்டோரா ஆவணங்கள் குறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையில், சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அமைப்புகள் அடங்கிய குழு மேற்பார்வை செய்யும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story