வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மீண்டும் அதிகாலை சுமார் 5 மணியளவில் சீரானது
இரவு சுமார் 8 மணி நேரம் வரை முடங்கிய சமூக வலைதள பக்கங்கள் மீண்டும் இயங்கத் துவங்கின.
இரவு சுமார் 8 மணி நேரம் வரை முடங்கிய சமூக வலைதள பக்கங்கள் மீண்டும் இயங்கத் துவங்கின. உலகம் முழுவதும் தகவல்களை பதிவிடவும், பரிமாறவும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகளை மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இந்த சேவைகள் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திடீரென முடங்கியதால், சமூகவலைதள பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சேவை முடங்கியதாகவும் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் பேஸ்புக் அறிவித்தது.
விரைவில் சேவை துவங்கும் எனவும் விளக்கம் அளித்தது. இந்த நிலையில், அதிகாலை சுமார் 5 மணிக்கு மேல், சமூக வலைதளங்கள் மீண்டும் செயல்படத் துவங்கின. பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு திரும்பியதால் சமூகவலைதள பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

Next Story