பழங்கால பொருட்கள் விற்பனையில் மோசடி - பிரமுகர்களுக்கு தொடர்பு..?

பழங்கால அரிய பொருட்கள் தன்னிடம் இருப்பதாக கூறி மோசடி செய்த மோன்சன் விவகாரம் குறித்து கேரள முதலமைச்சர் தனது மவுனத்தை கலைக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பழங்கால பொருட்கள் விற்பனையில் மோசடி -  பிரமுகர்களுக்கு தொடர்பு..?
x
பழங்கால அரிய பொருட்கள் தன்னிடம் இருப்பதாக கூறி மோசடி செய்த மோன்சன் விவகாரம் குறித்து கேரள முதலமைச்சர் தனது மவுனத்தை கலைக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் முரளிதரன்  தெரிவித்துள்ளார். 

ஆலப்புழாவை சேர்ந்த மோன்சன் மாவுங்கள் பழமையான பொருட்களை விற்பனை செய்து வந்ததுடன், புரூனே சுல்தானின் கிரீடம்,  சதாம் உசேன் பயன்படுத்திய திருகுரான், இயேசுவை காட்டி கொடுத்து யூதர்கள் பெற்ற நாணயங்களை வைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். போலியான பொருட்களை மோன்சன் மாவுங்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மோசடி மன்னனுக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உட்பட அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன், மோன்சனால் சாதாரண மக்கள் மட்டுமின்றி கால்வதுறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் அலுவலகத்தை சேர்ந்த சிலர் மோன்சனுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது மவுனத்தை கலைத்து பதில் அளிக்க வேண்டுமென்றார். 

Next Story

மேலும் செய்திகள்