லோக் ஜனசக்தி; கட்சி சின்னம் முடக்கம் - சிராக் பஸ்வான், பசுபதி குமார் பாரஸ் இடையே மோதல்
லோக் ஜனசக்தி கட்சியின் சின்னத்தை, தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சியின் சின்னத்தை, தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது. ராம் விலாஸ் பஸ்வானின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சிராக் பஸ்வானுக்கும், பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பாரஸுக்கும் இடையே மோதல் ஏற்பட, இருவரும் தாங்கள் தான் லோக் ஜனசக்தியின் உண்மையான தலைவர் என உரிமை கோரினர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பீஹாரில் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், சின்னத்தை ஒதுக்குவது குறித்து அறிவுறுத்தல் வழங்கும் படி, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ளதாலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும், லோக் ஜன சக்தி கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த இரு தரப்பினருக்கும் அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Next Story