அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு - 12 வாரங்களுக்குள் கணக்கிட உத்தரவு
தமிழகத்தில் அரசு ஊழியர்களுகான பதவி உயர்வை, 12 வாரங்களுக்குள் மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி தயாரித்து பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க, தமிழக தலைமை செயலாளர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த 4 வார கால கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சீனியாரிட்டியை மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட்டு, 12 வாரங்களுக்குள் பதவி உயர்வை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story