டெல்லியில் வீட்டு வேலை செய்த தமிழ்ப் பெண் : உடல் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு - இறப்பில் நீடிக்கும் மர்மம்
டெல்லியில் வீட்டு வேலை செய்து வந்த தமிழ்ப் பெண் மர்மமான முறையில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உளுந்தூர்பேட்டையை பூர்வீகமாக கொண்ட லக்ஷ்மி என்பவர், டெல்லி லஜ்பத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். இன்று காலை வழக்கமாக வீட்டு வேலைக்கு சென்ற அவர், எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக அவரது உறவினர்களுக்கு காலை 8 மணிக்கு தகவல் கிடைத்தது. லக்ஷ்மியின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாகக் குற்றம் சாட்டி, சடலத்தை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் டெல்லி வாழ் தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, வீட்டின் உரிமையாளரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story