மும்பைக்குள் நுழையும் சிறுத்தைகள்..! - மனிதர்களை அவ்வப்போது தாக்கும் சூழல்
மும்பையில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை மூதாட்டி ஒருவர் கைத்தடியால் விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மும்பை நகரத்திற்குள் அடிக்கடி எங்கிருந்து சிறுத்தைகள் வருகின்றன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
மும்பையில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை மூதாட்டி ஒருவர் கைத்தடியால் விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மும்பை நகரத்திற்குள் அடிக்கடி எங்கிருந்து சிறுத்தைகள் வருகின்றன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம். இரவில் வீட்டுக்கு வெளியே இருக்கும் மூதாட்டியை மறைந்திருக்கும் சிறுத்தை தாக்கும் இந்த பரபரப்பு சிசிடிவி காட்சி மும்பை ஆரே மில்க் காலனி பகுதியில் பதிவானது.
ஆரே மில்க் காலனி மும்பை நகருக்கே வடக்கே இருக்கும் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவையொட்டிய மிதி ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதியாகும். தானே வரையில் 103 சதுர மீட்டர் பரப்பளவில் பரவி கிடக்கும் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதியான ஆரே காலனி, வகைப்படுத்தப்படாத காடு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் 47 சிறுத்தைகள், மான்கள் உள்பட பல வன உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் சில சிறுத்தைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்கும் சம்பவங்களும், உயிரிழப்பு நேரிடும் சம்பவங்களும் நிகழ்கின்றன. காட்டுப்பகுதியையொட்டிய குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளை நாடி நாய்களும், காட்டு விலங்குகளும் வெளியேறுகின்றன. இவ்வாறு திரியும் நாய்களை எளிதாக வேட்டையாடி சாப்பிட்டு பழகிய சிறுத்தைகள், இந்த பகுதியில் இருக்கும் நாய்களை பிடிப்பதற்காக இரவு நேரத்தில் வெளியே வருவதாக வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி வெளியேறும் போது மனிதர்களையும் சிறுத்தைகள் தாக்குகின்றன என்றும், வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு விலங்குகளின் வாழ்விடம் சுருங்குவதாலும் அவைகள் வெளியேற நேரிடுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மக்களும், சிறுத்தைகளும் இணைந்து வாழும் பகுதியென அடையாளப்படுத்தப்படும் ஆரே மில்க் காலனி பகுதியில் குடியிருப்புகளுக்கு சிறுத்தைகள் வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

Next Story