"காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக உள்ளேன்" - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பேட்டி
காங்கிரசில் இருந்து விலக உள்ளதாகவும், அதே சமயம் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரசில் இருந்து விலக உள்ளதாகவும், அதே சமயம் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு இரு நாள் பயணமாக வந்துள்ள அமரீந்தர் சிங், நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலக இருப்பதாகவும் ஆனால் பாஜகவில் இணையும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story