கபில் சிபல் கருத்து - ஆனந்த் சர்மா ஆதரவு
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அக்கட்சியின் ஆனந்த் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கபில் சிபல், காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் இல்லாத நிலையில் முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை என கூறியிருந்தார்.கபில் சிபல் இந்த கருத்துக்கு டெல்லி காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து நேற்று அவரது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், இந்த செயலுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், கருத்து வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என தெரிவித்துள்ள ஆனந்த் சர்மா,இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
Next Story