மேற்குவங்கத்தில் இன்று இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

மேற்குவங்க இடைத்தேர்தலில் முதலமைச்சர் ம‌ம்தா பானர்ஜி போட்டியிடும் ப‌வானிப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்குவங்கத்தில் இன்று இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு
x
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ந‌ந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட ம‌ம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். தொடர்ந்து, முதலமைச்சராக பதவியேற்ற அவர், 6 மாத‌த்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ப‌வானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ம‌ம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ம‌ம்தா பானர்ஜி முதலமைச்சராக தொடர, இடைதேர்தலில் வெற்றி பெறுவது கட்டாயம் என்பதால், இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் நாடு முழுவதும் காலியாக உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 3 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்