ஏழுமலையான் கோவிலில் போலி டிக்கெட்: 2 பேர் கைது - போலீசார் விசாரணை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக பக்தர்களை ஏமாற்றிய 2 தரகர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசன அனுமதி தொடர்பாக தெலங்கானாவை சேர்ந்த பக்தர்கள் குழு ஒன்று இடைத்தரகர்கள் கிஷோர் மற்றும் நாகராஜ் ஆகியோரை அணுகி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட தரகர்கள் அறங்காவலர் குழு தலைவர் சிபாரிசு கடிதம் பெற்றுத் தருவதாக கூறி அவர்களிடம் 8 ஆயிரத்து 500 ரூபாயை பெற்றுக் கொண்டு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து, பக்தர்கள் குழு அலிபிரி சோதனைச் சாவடியில் அந்த குறுஞ்செய்தியை காண்பித்த போதுதான் அது போலியானது எனவும் அவர்கள் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் தரகர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் திருப்பதிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறும் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
Next Story