பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர வாய்ப்பு

சர்வதேச சந்தைகளில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
x
கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 ரூபாய் அளவில் நிலையாக தொடர்கிறது. ஆனால் பெட்ரோலுக்கு மூலப் பொருளானா கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தைகளில் பீப்பாய் ஒன்றுக்கு செப்டம்பர் 9இல் 71.45 டாலர்களாக இருந்து செப்டம்பர் 20இல் 74.57 டாலர்களாக, 3 டாலர்கள் விலை அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில், பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 65 டாலர்கள் வரை விலை குறைந்த போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு சற்று குறைக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 80 சதவீதம் வரை இறக்குமதிகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்