ஃபாப்புலர் நிதி நிறுவனம் ரூ.2000 கோடி மோசடி - 270 கிளைகள் மூடல்

கேரள மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல பாப்புலர் ஃபைனான்ஸ் நிறுவனரின், 31.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஃபாப்புலர் நிதி நிறுவனம் ரூ.2000 கோடி மோசடி - 270 கிளைகள் மூடல்
x
கேரளாவில் உள்ள நிதி நிறுவனமான பாப்புலர் ஃபைனான்ஸ் தங்க நகைக் கடன், வைப்புத் தொகை வாங்கி அதற்கு வட்டி கொடுத்து வந்தது. பத்தனம்திட்டா மாவட்டம் வாகாயரை தலைமையிடமாக கொண்டு 270 கிளைகளுடன் செயல்பட்ட நிறுவனம் நூற்றுக்கணக்கானோருக்கு வைப்புத் தொகைக்கான வட்டி கொடுக்காத நிலையில், அனைத்து கிளைகளையும் மூடியது. இதன்மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த நிறுவனர் தாமஸ் டேனியல் ராய், மனைவி  பிரபா, மகள்கள் ரினு, ரியா, ரெபா ஆகிய ஐந்து பேரையும்  போலீசார் கைது செய்தனர். ஆயிரத்து 600 பேரிடம் தங்கம் மற்றும் பணம் வாங்கியுள்ளனர். மொத்தம் ஆயிரத்து 368 வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே, இவர்களின் பெயர்களில் இருந்த ரூ. 31.2 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.  கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் கட்டடம், நிலம், 10  சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 14 கோடி ரூபாய் மதிப்பு தங்கமும் பறிமுதலாகி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்