கர்பா நடனத்தில் அசத்தும் முதியவர்கள் - 60 வயதை கடந்தவர்களின் துள்ளல் நடனம்
நவராத்திரியை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் கர்பா நடனத்தில் வயதான பெண்மணிகள் அசத்தி வருகின்றனர்.
நவராத்திரியை முன்னிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் கர்பா நடனத்தில் வயதான பெண்மணிகள் அசத்தி வருகின்றனர். எதையும் கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் போதும், வயது தடையில்லை என்பதற்கு ஏற்றாற்போல், 60 வயதை கடந்த முதியவர்கள் கர்பா நடனம் கற்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டவர்கள். இருந்த போதும், வலியை பொருட்படுத்தாமல் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் வரை அவர்கள் நடனம் கற்று வருகின்றனர்.
Next Story