புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு: பிற்பகலில் பதவி ஏற்பு என அறிவிப்பு
குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பிற்கபகல் பதவி ஏற்க உள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில் முதலமைச்சர் பதவிக்காலம் முடிய ஓராண்டு உள்ள நிலையில் விஜய் ரூபானி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த முதலமைச்சர் யார் என்ற பாஜகவின் ஆலோசனை கூட்டம் காந்தி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பெயரை பாஜக தலைமை பொறுப்பாளரான நரேந்திர சிங் தோமர் அறிவித்தார். இந்த முடிவுக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்கவே, ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை சந்தித்த பூபேந்திர படேல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு பதவி ஏற்பு நடைபெற உள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது காட்லோடியா தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட பூபேதிர படேல் வெற்றிப்பெற்றார். பாஜகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரான பூபேந்திர படேலுக்கு முதலமைச்சர் பதவியை பாஜக தலைமை வழங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story