"மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை" - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில், மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை என்ற முதலமைச்சர் பினராயி விஜயன், தனிமைப்படுத்தலை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு
மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை - முதல்வர் பினராயி விஜயன்
x
கேரளாவில், மீண்டும் முழு ஊரடங்கு சாத்தியமில்லை என்ற முதலமைச்சர் பினராயி விஜயன், தனிமைப்படுத்தலை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும்  என கூறியுள்ளார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன், அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்தாலோசித்தார். துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,  மாநிலத்தில் மீண்டும் முழு  ஊரடங்கு சாத்தியமில்லை என்றார். வார்டு அளவிலான குழுக்களை வலுப்படுத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய அவர், தனிமைப்படுத்தலை மீறுவோருக்கு, கடும் அபராதம், அவரவர் செலவில் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 2 வாரங்களுக்குள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதே இதன் நோக்கம் என பினராயி விஜயன் கூறினார்.
 

Next Story

மேலும் செய்திகள்