26 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தால் அவதிப்படும் மக்கள்

பீஹாரில் தொடர்ந்து பெய்த கனமழையால் 26க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்
26 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தால் அவதிப்படும் மக்கள்
x
பீஹார் மாநிலத்தில் விடாமல் பெய்த கனமழையால், கங்கை ஆற்றில் நீர் நிரம்பி, பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகாரின் ஹாஜிபூர் மற்றும் சரண் பகுதிகளில் வீடுகளும் விவசாய வயல்களும் முற்றிலும் மூழ்கி உள்ளது. இதனால் பயிர்களும் சேதமடைந்ததால், கிராமமக்கள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெள்ள நீரானது சற்றும் குறையாமல் இருக்கும் நிலையில், மக்கள் வெள்ளத்திலிருந்து தப்பிக்க கால்நடைகளுடன் உயரமான இடங்களுக்குச் செல்கின்றனர். 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ககாரியா மற்றும் பாகல்பூர் ஆகிய பகுதிகளை வான்வழி மூலம் ஆய்வு செய்த அவர், சமஸ்திபூர் பகுதியையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்