ஆப்கானிஸ்தான் உடனான இந்தியாவின் வர்த்தகம் தொடரும் - ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் வர்த்தக உறவு நீடிக்கும் என்றும், அங்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதை முக்கிய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் உடனான இந்தியாவின் வர்த்தகம் தொடரும் - ஜெய்சங்கர்
x
ஆப்கானிஸ்தானுடனான இந்தியாவின் வர்த்தக உறவு நீடிக்கும் என்றும், அங்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதை முக்கிய நோக்கமாக கொண்டு அரசு செயல்படுவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கானில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்தும், அங்குள்ள மக்களின் பாதுகாப்பு குறித்த ஐநா  பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் 80 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்தியா சார்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்  செய்தியாளர்களை சந்தித்த போது, ஆப்கானிஸ்தான் மீதான இந்தியாவின் முதலீடு அந்நாட்டு மக்களின் வரலாற்று உறவை பிரதிபலிப்பதாகவும், அதனால் ஆப்கான் உடனான வர்த்தக உறவு நீடிக்கும் எனவும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் கொண்டு வரும் நோக்கத்தில் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக குறிப்பிட்டார். ஆப்கானில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கபதற்காக இந்தியா சார்பில் மற்றொரு விமானப்படை விமானம் அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும்  மத்திய அமைச்சர் கூறினார். 




Next Story

மேலும் செய்திகள்