"தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு" - பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி கருத்து
காஷ்மீர் தீவிரவாத நடவடிக்கைகளை தலிபான்கள் ஆதரிக்கும் நிலை உள்ளதால் இஸ்ரேலின் தீவிரவாத எதிர்ப்பு உத்தியை இந்தியா பின்பற்ற வேண்டும் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிடி.ரவி, தலிபான் ஒரு தீவிரவாத அமைப்பு என்பதை மறந்து விடக் கூடாது என்றும் அந்த அமைப்பு பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் சீனாவும் தாலிபான்களுக்கு உதவுகிறது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை தலிபான் ஆதரிக்கலாம் என்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களையும் அவர்கள் தூண்டி விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அப்படி செய்தால், இஸ்ரேலின் தீவிரவாத எதிர்ப்பு உத்தியை இந்தியா கையாள வேண்டும் எனவும் சி.டி.ரவி தெரிவித்தார்.
Next Story