கிராமம், விவசாய மேம்பாடு குறித்து மோடி பேச்சு
விவசாயமும், விவசாயிகளுமே நாட்டின் பெருமை என்றும், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்தும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விவசாயமும், விவசாயிகளுமே நாட்டின் பெருமை என்றும், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி குறித்தும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்கள்தான் ஆட்சி செய்கிறார்கள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீர், தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும், லடாக்கில் சிந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி கூறினார். கிராமங்களில், தரமான மருத்துவ வசதி ஏற்படுத்தவும்,நாட்டின் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்படுவதாகவும் மோடி பேசினார். கிராமங்களில் புதிய பொருளாதார திட்டத்தை உருவாக்க முயற்சி எடுத்து வருவதாகவும்,கிராமம்தோறும் இணைய மற்றும் உள்கட்டமைப்பு வசதி வழங்க முயற்சித்து வருவதாக கூறினார். 70 சதவீத கிராமத்துக்கு இணைய சேவை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் தொகை பெருக்கத்தால் விளைநில பரப்பு சுருங்கி வருவதாகவும், நிறைய விவசாயிகளிடம் 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ளதாகவும், சிறு, குறு விவசாயிகளின் நலனை அரசு கருத்தில் கொண்டுள்ளது என்றும் கூறினார்.பீம்யோஜனா, ஆதார விலை, குறைந்த வட்டியில் விவசாய கடன் ஆகியவை விவசாயிகளுக்கு உதவியாக உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியப் பொருட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளதாகவும், விவசாயிகளின் நிலம், அவர்களிடம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். கிராம, நகர வேறுபாடின்றி அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க, உறுதி எடுத்துள்ளதாக கூறிய மோடி, நாட்டின் அனைத்து பகுதிகளையும், ரயில், நீர்வழி தடம் மற்றும் புதிய தொழில்நுட்பம் மூலம் இணைக்க வேண்டும் என்றார்.
Next Story