முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் அதிகாரம்; கருணாநிதி பெற்றுத்தந்த உரிமை - நாளை கொடி ஏற்றுகிறார் மு.க.ஸ்டாலின்

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி.
முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் அதிகாரம்; கருணாநிதி பெற்றுத்தந்த உரிமை - நாளை கொடி ஏற்றுகிறார் மு.க.ஸ்டாலின்
x
சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி. இதன் பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.சுதந்திர இந்தியாவில் குடியரசு தினத்தன்று டெல்லியில் குடியரசுத்தலைவரும், சுதந்திர தினத்தன்று டெல்லியில் பிரதமரும், அந்தந்த மாநிலங்களில் முதல்வர்களும் கொடியேற்றி வருகின்றனர்.ஆனால், 1974-ஆம் ஆண்டிற்கு முந்தைய சுதந்திர தினம் வரை நிலைமை இதுவல்ல. சுதந்திர தினம், குடியரசு தினம்
என இரண்டு நாட்களுமே மாநிலங்களில் ஆளுநர்கள் தான் கொடியேற்றி வந்தனர்.1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று
புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார்.  இதே காலகட்டத்தில் மாநில சுயாட்சி, தனிக்கொடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கருணாநிதியின் குரல் ஒலித்து கொண்டிருந்தது.இத்தகைய சூழலில் தான், மாநில தலைநகரங்களில் குடியரசு நாளன்று ஆளுநர்களும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து 1974-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக அப்போதைய முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்