மகாராஷ்டிராவில் ஊரடங்கு தளர்வுகள் - இரவு 10 மணி வரை கடைகள் இயங்க அனுமதி
மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற 15-ம் தேதி முதல் அங்கு இரவு 10 மணி வரை, அனைத்து நாட்களிலும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு 200 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், உடற்பயிற்சி நிலையங்கள், சலூன்கள் 50 சதவிகித வாடிக்கையாளருடன் இயங்க மகாராஷ்டிர அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசியல், கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு வழக்கம்போல் அங்கு தடை தொடர்கிறது.
Next Story