ஐ.நா பாதுகாப்பு அவையில் உரையாற்றிய மோடி - இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த ரஷ்ய அதிபர்
ஐ.நாவின் பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கடல்சார் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் பாதுகாப்பு அவையில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கடல்சார் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியாவிற்கு, நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஐ.நா பாதுகாப்பு அவையில் திங்களன்று நடைபெற்ற கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில், காணொளி மூலம் தலைமை உரையாற்றிய பிரதமர் மோடி, கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துக்கு எதிராக உள்ள தடைகளை நீக்க ஐந்து அம்ச திட்டம் ஒன்றை முன்னொழிந்தார்.ஐ.நா பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் ஒருவர் உரை நிகழ்த்துவது இது தான் முதன் முறையாகும்தடையற்ற கடல்சார் வர்த்தகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இயற்கை பேரிடர்கள் மற்றும் கடற்கொளையர்களால் ஏற்படும் ஆபத்துகளை சமாளிக்க அனைத்து நாடுகளும் கூட்டாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தனது உரையில் கூறினார்.உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான ரஷ்யா, கடல்சார் பாதுகாப்பிற்கான சர்வதேச சட்ட ஒழுங்கை உறுதி செய்ய பெரிய அளவில் பங்களிப்பதாக புட்டின் தனது உரையில் கூறினார்.
Next Story