ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி - ஒப்புதல்.. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி - ஒப்புதல்.. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி - ஒப்புதல்.. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
x
ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி - ஒப்புதல்.. விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது 

இந்தியாவில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின், கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்  2 டோஸ் தடுப்பூசிகள். அதாவது, முதலில் ஒரு டோஸ் செலுத்தி, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு மற்றொரு டோஸ் செலுத்த வேண்டும். இந்த நிலையில் அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம், ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி 3ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையில், 85 சதவீதம் செயல்திறன் கொண்டது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், தங்களது ஒற்றை டோஸ் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு இந்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக்  மண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்